Latest News

தர்மதுரை – விமர்சனம்


தேனி மாவட்டம் குக்கிராமத்தில் இருக்கும் விஜய் சேதுபதி, குடித்துவிட்டு தாடியுடன் சுற்றித்திரிகிறார். அம்மா(ராதிகா)விடம் மட்டும் பாசத்தை வாங்கி வைத்து, உடன் பிறந்த அண்ணன், தம்பிகளிடம் பகையை வளர்த்து வைத்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியால் அண்ணன், தம்பிகளுக்கு இன்னல்கள் வர, விஜய் சேதுபதியை தீர்த்து கட்ட நினைக்கிறார்கள் அவர்கள். இரவோடு இரவாக அம்மா(ராதிகா)வின் தயவால் அந்த ஊரினை காலி செய்து கிளம்பி விடுகிறார் விஜய் சேதுபதி.
கிளம்பும் போது வீட்டில் இருந்த பணத்தை தெரியாமல் எடுத்து சென்று விடுகிறார். இதனால் வீதிக்கு வந்துவிடுகின்றனர் விஜய் சேதுபதியின் குடும்பத்தினர். மேலும், விஜய் சேதுபதியின் மேல் திருட்டு பழியையும் சுமத்தி, அவர் மீது கொலைவெறியுடனும் இருக்கின்றனர் அந்த குடும்பத்தினர் (ராதிகாவைத் தவிர).
எதற்காக விஜய் சேதுபதி இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்..??? அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எதற்காக விஜய் சேதுபதியின் மேல் இவ்வளவு கோபமாக இருக்க காரணம் என்ன..??? விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்தது…??? என்பதை மீதிக் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி..
விஜய்சேதுபதி – தர்மதுரையாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். மொத்த கதையும் தனி ஒருவனாக சுமந்து சென்று அனைவரின் கவனைத்தையும் வெகுவாக கவர்ந்திருக்கிறார். தாய்க்கு நல்ல மகனாகவும், நண்பனுக்கு நண்பனாகவும், காதலில் மன்னனாகவும், நவரச நடிப்பையும் மொத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
விஜய் சேதுபதியால் மட்டுமே இந்த கதையில் நடிக்க முடியும் என்பதை பல இடங்களில் நிரூபிக்கிறார் . சேலை கட்டிய அழகு ராணியாக களம் இறங்கியிருக்கிறார் தமன்னா. விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் உள்ளே வரும்தமன்னா தன் கண்களாலே பல கதைகளை சொல்லிவிட்டு செல்கிறார். படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார் சிருஷ்டி டாங்கே.
கிராமத்து குயிலாக வாழ்ந்து காட்டியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அண்ணன் என அழைத்த ஒருவரை மாமா என அழைக்கும் தருணத்தில் ’என்னம்மா இந்த பொண்ணு இப்படி நடிக்குது’ என அனைவரின் மனதிலும் எழும் ஒரு ஆச்சரிய நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ராதிகா – தான் ஒரு சீனியர் நடிகை என்பதை தெளிவாக காட்டியுள்ளார். அருமையான நடிப்பு, தன் மகன் (விஜய் சேதுபதி) மேல் பாசம் காட்டும் இடத்தில் அதிக ஸ்கோர் வாங்குகிறார்.
ராஜேஷ், எம் எஸ் பாஸ்கர் என அனைவரும் தங்களுக்கு கொடுத்த பகுதியினை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 2 பாடல்கள் ரகம், பின்னணியில் இசையில் தண்டவாளம் போல் கதையோடு தொடர்கிறார்.
கதையின் பாத்திரங்கள் அனைவரும் வலுவாக இருந்தாலும், கதை வலுவாக இல்லாதது படத்திற்கு சற்று பின்னடைவுதான். சுகுமாரின் ஒளிப்பதிவில் தென்காசி மாவட்டம் மிக அழகாக தெரிகிறது. முதல் பாதியில் இருந்த ஒரு வேகம் இரண்டாம் பாதியில் இல்லாதது சிறு குறை தான்.
தர்மதுரை – விஜய் சேதுபதியின் பயணத்தில் நாமும் பங்கு பெறலாம்.
Back to Top

Recent Post

Gallery