தமிழ் சினிமாவில் தற்போதைய கிங் ஆப் ஓபனிங் என்று அழைக்கப்படுவர்கள் விஜய், அஜித். இருவரும் நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் விஷால் பல எதிர்ப்புகளை வாங்கிக் கொண்டார்
இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக மேலும் நிதி திரட்ட நடிகர் சங்கம் சார்பில் விரைவில் நாடகம் ஒன்றை நடத்த இருக்கிறார்கள். இந்த நாடக விழாவில் ரஜினி மற்றும் கமலை நிச்சயம் அழைப்போம்.
அஜித்தை அழைக்க மாட்டோம். விஜய், கிரிகெட் போட்டியில் தனக்கு ஈடுபாடு இல்லை எனவும் கூறியிருந்தார். ஆகவே அவரையும் அழைக்க மாட்டோம். இது அவரவரது தனிப்பட்ட விருப்பம்’ என வார இதழ் ஒன்றிற்கு விஷால் பேட்டியளித்துள்ளார்.

