சிம்பு நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘அச்சம் என்பது மடமையடா’. படத்தின் ஒரு பாடலை தவிர மற்ற அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு ரிலிசுக்கு தயார் நிலையில் உள்ளது.
அந்த ஒரு பாடலும் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் கெளதம் இயக்கும் அடுத்த படத்திலும் சிம்பு தான் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
நான்கு மொழி நாயகர்கள் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்களாம். அனுஷ்கா, தமன்னா, மஞ்சிமா மோகன் என உட்ச நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்களாம்.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவர இருக்கின்றன. சிம்புவிற்கும் கெளதம்மிற்கு இடையே மனசலப்பு என கூறிவந்த சில செய்திகளுக்கு இந்த செய்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது…..

