Latest News

ரஜினிக்கு ஜோடி: த்ரிஷா இல்லனா நயன்தாரா..???


ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஷங்கரின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘2.O’ தான். இதனையடுத்து அனைவரும் எதிர்பார்க்காத ஒன்று ரஜினி-ரஞ்சித் கூட்டணி.
கபாலிக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைவார்கள் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென இந்த கூட்டணி இணைந்தது அனைவரையும் மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியது.
அதுவும் இந்த படம் கபாலி படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என இயக்குனர் ரஞ்சித் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது ஒரு புதுவகையான பயணமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் இருந்தால் ரசிகர்ளுக்கு பிடிக்கும் என பல இணையதளங்கள் போட்டி வைத்ததில் முதல் இடத்தை நயன்தாராவும், இரண்டாம் இடத்தை த்ரிஷாவும் பிடித்துள்ளனர்.
எது என்னவாயினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழுவினர் தெரிவித்த பின்னரே முழுமையாக உறுதி செய்யப்படும். படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
Back to Top

Recent Post

Gallery