Latest News

கமலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து



நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கமலுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். தற்போது தயாரிப்பாளர்கள் சங்கமும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது...

அன்புக்கும், பண்புக்கும், பாசத்துக்கும், எந்நாளும் போற்றுதலுக்கும் உரிய தாங்கள், கலையுலகில் நடிப்புத்துறை மட்டுமின்றி எத்தனை துறைகள் உள்ளதோ அத்தனை துறைகளிலும் வெற்றிக்கொடி கட்டி, உலகில் உள்ள அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் ஈடுசெய்து, இந்திய நாட்டின் மிகப்பெரிய விருதுகளையும் பெற்று, உலகநாயகனாக நடிப்புலகில் இமயமாய் விளங்கிக் கொண்டிருக்கும் தங்களுக்கு உலகளவில் எத்தனையோ விருதுகள் கிடைத்திருக்கும் பட்சத்தில் இந்திய திரையுலகமே வியக்கும் வகையில், தற்போது பிரான்ஸ் அரசின் மிகப்பெரிய உயரிய விருதான 'செவாலியே' விருதினை, இன்றும் நம்மை விட்டு பிரியா நடிகர் நடிப்பின் சக்கரவர்த்தி 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசனுக்குப் பிறகு நடிகர் திலகத்தின் கலைவாரிசான தங்களுக்கு அறிவித்திருப்பது தமிழ் திரையுலகினருக்கு மட்டுமின்றி உலக சினிமா துறைக்கே பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுக்கு இதுபோன்று பல விருதுகளும், நற்பெயர்களும் மென்மேலும் கிடைத்திட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாகவும், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Back to Top

Recent Post

Gallery