மெட்ராஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், கேத்ரின் தெரசா. தொடர்ந்து விஷாலுடன் கதகளி, அதர்வாவுடன் கணிதன் படங்களில் நடித்தவர் இப்போது, ஆர்யாவுடன் ‛கடம்பன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, ‛மஞ்சப்பை' ராகவன் இயக்கி வருகிறார். படத்தின், கிளைமாக்ஸ் காட்சியை, தாய்லாந்தில் படமாக்கினர். நாற்பதுக்கும் மேற்பட்ட யானைக்கூட்டத்தில் கேத்ரின் இருக்க, படத்தின் நாயகன் ஆர்யா, யானைகளிடமிருந்து கேத்ரினை மீட்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. காட்சி பார்ப்பவர்களுக்கு கிலியை ஏற்படுத்தினாலும், இந்தக்காட்சியில் நடித்த போது, ஆரம்பத்தில் மிரட்சியுடன் தான் இருந்துள்ளார். பின்னர் யானைகளுடன் பழக பழக கேத்ரின் ரொம்பவே ஒன்றி போய்விட்டாராம். யானைகள் பார்க்கத்தான் பயப்படும்படி உள்ளன. ஆனால், பழகிவிட்டால், குழந்தைகளாகி விடுகின்றன என, கேத்ரின் கூறியுள்ளார்.
யானைகளுக்கு நடுவே... கேத்ரினின் த்ரில் அனுபவம்
Reviewed by Tamilvia
on
1:45:00 PM
Rating: 5
Reviewed by Tamilvia
on
1:45:00 PM
Rating: 5

