தனது கவர்ச்சியினால் தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்தவர் நயன்தாரா. ஆனால் சமீபகாலமாக அவர் கவர்ச்சிக்கு குட்பை சொல்லிவிட்டு பர்பாமென்ஸ் ரோல்களை செலக்ட் பண்ணி நடித்து வருகிறார். மேலும், மாயா, நானும் ரெளடிதான் படங்களுக்குப்பிறகு விக்ரமின் இருமுகன் படத்திலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. அதுவும் அவர் நீண்டகாலமாக ஆவலுடன் எதிர்பார்த்து வந்த போலீஸ் வேடத்திலேயே நடித்துள்ளார். அதோடு சண்டை காட்சியிலும் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அந்த வகையில், இந்த படத்தில் நயன்தாராவை சில படங்களில் விஜயசாந்தி நடித்தது போன்று கெத்தான நடிப்பை வெளிப்படுத்த வைத்திருக்கிறாராம் இயக்குனர் ஆனந்த்சங்கர். அதுமட்டுமின்றி, நயன்தாராவும் ரியல் போலீசாகவே மாறி ஆக்சன் ஹீரோயினிக்குரிய தில்லான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதனால், இதற்கு முன்பு நயன்தாரா நடித்த சில படங்களில் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலும், இந்த இருமுகன் படத்தில் அவர் நடித்துள்ள கேரக்டர்தான் அந்த பட்டத்துக்கு பொருத்தமான கதாபாத்திரமாகஅமைந்திருப்பதாக அப்படக்குழுவினர் சொல்கிறார்கள்.

