நடிகை எமி தற்போது ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார். தற்போது படப்பிடிப்பிற்கு இடைவெளி விட்டிருப்பதால் உலகை சுற்றிப் பார்க்க கிளம்பி விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஸ்பெயின் அருகில் உள்ள தனிமைத் தீவான இபிஸா என்ற தீவுக்குச் சென்றார். தீவை சுற்றிப்பார்த்த எமி, பின்பு அங்கு நடந்த போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார். பின்னர் ஸ்பெயின் திரும்பும்போதுதான் அவரது கைப் பை திருட்டு போயிருந்தது தெரிந்தது.
அதில்தான் அவரது பாஸ்போர்ட் விசா உள்ளிட்ட முக்கிய பொருட்கள் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த எமி, இபிஸா தீவு போலீசில் புகார் செய்தார். பின்னர் தீவிலிருந்து ஸ்பெயின் திரும்பி அங்குள்ள தூதரகம் சென்று புகார் அளித்தார்.
பின்னர் எமி தனது லேப் டாப்பிலிருந்த பாஸ்போர்ட் காப்பியை பிரிண்ட் எடுத்துக் கொடுத்தார். பின்னர் ஸ்பெயின் தூதரகம் இங்கிலாந்து தூதரகத்துடன் தொடர்பு கொண்டு விசாரித்து ஏமி நாடு திரும்ப வேண்டிய டாக்குமெண்டுகளை தயார் செய்து கொடுத்தது. அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து விட்டு இங்கிலாந்து திரும்பினார் எமி.