கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் என்எச் 10. டில்லியிலிருந்து பாகிஸ்தான் எல்லை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைதான் என்.எச் 10. இந்த சாலையில் நடக்கும் ரோட் திரில்லர் கதை தான் இது. அனுஷ்கா சர்மா ஆக்ஷ்ன் அவதாரம் எடுத்த படம். நவ்தீப் சிங் இயக்கி இருந்தார். பேன்தோம் பிலிம்ஸ், கிளீன் ஸ்டேட் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.
இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இதில் த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. த்ரிஷா ஒப்புதல் கிடைத்ததும் மேற்கொண்டு மற்ற பணிகள் தொடங்கும்.
இதுகுறித்து த்ரிஷா கூறியதாவது: என்எச் 10 படம் நான் பார்த்து வியந்த படம். இதில் நடிக்க முடியுமா என்று கேட்டு வந்தனர், செய்யலாம் என்று கூறியிருக்கிறேன். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை. முடிவானவுடன் தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிப்பார்கள் என்றார்.
த்ரிஷா ரேவதி இயக்கத்தில் குயின் ரீமேக்கிலும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.