Latest News

விஜய் படத்தில் அட்லியின் செண்டிமென்ட் நாயகி!



விஜய் நடித்த வில்லு, சிவகாசி போன்ற படங்களில் நடித்தவர் நயன்தாரா. அதேபோல் விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் நடித்தவர் காஜல்அகர்வால். பின்னர் விஜய் நடித்த படங்களில் இவர்கள் யாரும் இடம்பெறவில்லை. இந்நிலையில், தற்போது பைரவா படத்தில் கீர்த்தி சுரேசுடன் நடித்து வரும் விஜய், தெறியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடிக்கும் 61வது படத்தில் நயன்தாரா- காஜல்அகர்வால் என்ற இரண்டு முன்னணி நடிகைகளுக்கும் வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், அட்லி இயக்கிய ராஜாராணி படத்தில் நாயகியாக நடித்தவர் நயன்தாரா. அந்த படமும் ஹிட்டானது. அதனால் அந்த செண்டிமென்ட் காரணமாக தனது அடுத்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் அட்லி. அதுகுறித்து விஜய்யிடம் ஒப்புதல் வாங்கிவிட்ட அவர், இப்போது நயன்தாராவிடம் கால்சீட் பேசியுள்ளாராம். அதோடு, இதே படத்தில் இன்னொரு நாயகியும் இருப்பதால் அந்த வேடத்தை காஜல் அகர்வாலுக்கு கொடுக்கும் யோசனையும் வைத்திருக்கிறாராம் அட்லி.
Back to Top

Recent Post

Gallery