ஒர் பெரிய ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் சாப்ட்வேர் இஞ்சினியராக வருகிறார் சிவா(சிம்பு). அவருக்கு உதவியாளராக வருகிறார் சூரி. அரட்டை, கலாட்டா என வாழ்க்கை செல்ல தன் அப்பாவின் ஆசைக்காக நயன்தாராவை பெண் பார்க்க செல்கிறார் சிம்பு.
நயன்தராவை பார்த்தவுடன் அவர் மீது காதல் வருகிறது சிம்புவிற்கு. நயன்தாரா சிம்புவிடம் தனியாக பேச அழைக்கிறார். ஆண்ட்ரியாவின் காதல் பற்றி சிம்புவிடம் கேட்கிறார் நயன்தாரா…. இந்த இடம் செட் ஆகாது என சிம்பு கிளம்ப, பிடித்திருக்கிறது என்கிறார் நயன்தாரா.
ஆண்ட்ரியாவின் காதல் ப்ளாஷ் பேக் பக்கம் போகிறது கதை …. ஆண்ட்ரியாவும் சிம்புவும் காதலிக்கிறார்கள். பாடல்கள், கெஞ்சல், கொஞ்சல் என அமைதியாக செல்லும் காதல் திருமணத்தை எட்டும் போது சில காரணங்களால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். இந்த பிளாஷ் பேக் முடிந்ததும் மீண்டும் நயன்தாராவின் பக்கம் கதை திரும்ப, நயன்தாராவும் சிம்புவும் காதலிக்க சின்ன சின்ன பிரச்சனைகளில் சண்டை வர மீண்டும் ஒன்று சேர்கின்றனர். அம்மு குட்டி, செல்ல குட்டி, புஜ்ஜிமா என காதல் திருமணம் வரை செல்லும் தருணத்தில் இருவரின் பெற்றோர்களுக்கிடையே சண்டை வர திருமணம் நிற்கும் நிலை வருகிறது.
மீண்டும் இவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை…
எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் சிம்பு மீண்டும் நமக்கே கிடைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்,.. ஓபனிங் சாங் இல்லாமல் அமைதியான எண்ட்ரீ கொடுக்கும் போதே படத்தினை பார்க்கலாம் என்று தோன்றிவிடுகிறது. தனக்கே உரித்தான துறுதுறு நடிப்பால் நம் அனைவரையும் வெகுவாகவே கவர்கிறார். இவ்வளவு பெரிய நடிகர் சிம்பு அடிக்கடி சூரியிடம் பல்பு வாங்குவதும், அதை சிம்பு சமாளிப்பதும் கவுண்டரில் இருவரும் கலக்குகிறார்கள். நிச்சயமாக இந்த படத்திற்கு பிறகு சிம்புவிற்கு இன்னும் பெண் ரசிகைகள் அதிகமாவார்கள்…
நயன்தாரா …ப்ப்ப்ப்பா செம அழகு…. இந்த கதையில் நடித்ததற்கே அவருக்கு முதலில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். ரியல் வாழ்க்கை ரீல் வாழ்க்கையோடு ஒன்றி விட்டது போன்ற காட்சிகள் பல உள்ளன.
சூரி … டைமிங் கவுண்டர் கொடுக்கும் காட்சிகள் பட்டையை கிளப்பி விட்டார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நிறுத்தாமல் கவுண்டர் கொடுப்பதற்கு சூரியை விட்டால் வேறு யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
கெஸ்ட் ரோலில் ஜெய் மற்றும் சந்தானமும் கலக்கியிருக்கிறார்கள். ஆண்ட்ரியாவின் நடிப்பு அழகு, அருமை.. சிம்புவின் தம்பி குறளரசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரகம். பின்னணி இசை கொஞ்சம் கவனித்திருக்கலாம். பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவு ஹீரோ, ஹீரோயின்களை அருமையாக காட்டியிருக்கிறார்.
அமைதியாக செல்லும் கதையில் அந்த குத்து பாட்டு தேவைதானா?? ஆனால் சிம்புவின் நடனத்திற்காக பார்க்கலாம்.
சிம்பு நயன்தரா – சிம்பு ஆண்ட்ரியா இருவரின் கெமிஸ்ட்ரியும் நன்றாகவே வேலை செய்திருக்கிறது…. அப்படியே நிஜ காதலர்கள் போன்றே நடித்திருக்கிறார்கள் (நடித்திருக்கிறார்கள் என்று தான் சொல்லியிருக்கிறேன்). இரண்டாம் பாதியில் மிகவும் மெதுவாக கதை நகர்வது கொஞ்சம் எரிச்சலடைய வைக்கிறது.
காதலர்களுக்கும், காதலை விரும்புவர்களுக்கும் இப்படம் ஒரு சிம்ம சொப்பணம்…
இது நம்ம ஆளு – காதலர்களின் முகம்