கடந்த ஆண்டு டோலிவுட்டில் வெளிவந்த படங்களில் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு, தயாரிப்பு செலவைக்காட்டிலும் 20 மடங்கு லாபம் கொடுத்த திரைப்படம் பெல்லுசூப்பலு. விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா ஜோடி சேர்ந்து நடித்த பெல்லிசூப்பலு திரைப்படம் வசூல் சாதனையுடன் விமர்சக ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் இயக்குனர் செந்தில் வீராசாமி பெல்லிசூப்பலு படத்தை தமிழில் இயக்கவுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிக்க நடிகை தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். தெலுங்கில் வெற்றி பெற்ற படம் என்பதால் தமன்னாவும் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். நாயகனுக்கான தேடுதலில் தற்போது படக்குழு ஈடுபட்டுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
பெல்லிசூப்புலு தமிழ் ரீமேக்கில் தமன்னா
Reviewed by Tamilvia
on
6:26:00 PM
Rating: 5