தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ராணா, பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழுக்க பிரபலமான நடிகராகிவிட்டார். தற்போது ராணா தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். ராணாவுடன் நிறைய நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர் நடிகை த்ரிஷா. இருவரும் காதலிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தி வெளியானது ஆனால் அதை இருவருமே மறுத்து வந்தனர்.
தற்போது மீண்டும் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் ராணா அளித்த பேட்டி ஒன்றில், தன் சினிமா வாழ்க்கை பற்றியும், திருமணம் பற்றியும் பேட்டியளித்துள்ளார். குறிப்பாக த்ரிஷா உடனான காதல் செய்தி பற்றியும் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
‛‛தற்போதைய சூழலில் சினிமாவை தவிர வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லை. என் வாழ்க்கை அசாதரணமானது. சூட்டிங் சூட்டிங் என்று மாதக்கணக்கில் வெளியூரில் இருப்பேன், அதை எல்லாம் பொறுத்து கொள்ள கூடிய பெண் அமைந்தால் திருமணம் செய்வேன். மேலும் நான் யாரையும் காதலிக்கவில்லை. த்ரிஷாவுக்கும், எனக்கும் ஒருபோதும் காதல் வந்தது கிடையாது. எங்களுக்குள் நல்ல நட்பு உள்ளது, அவ்வளவு தான். த்ரிஷாவை மட்டுமல்ல நான் எந்த பெண்ணையும் காதலிக்கவில்லை'' என்று கூறியுள்ளார்.